Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 87 >> 

1அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.

2கர்த்தர் யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.

3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)

4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

5சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்துவார்.

6கர்த்தர் மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)

7எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 87 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran