Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 82 >> 

1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)

3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

6நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

7ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.

8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 82 >> 


Bible2india.com
© 2010-2026
Help
Dual Panel

Laporan Masalah/Saran