Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 46 >> 

1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,

3அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)

4ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.

5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.

6தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.

7சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

8பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்துபாருங்கள்.

9அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

10நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

11சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 46 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran