Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 4 >> 

1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.

2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)

3பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.

4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)

5நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாக இருங்கள்.

6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.

7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.

8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 4 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran