Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 127 >> 

1கர்த்தர் வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;

2கர்த்தர் நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.

3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.

4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

5இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். (6)அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 127 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran