Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Isaiah 62 >> 

1சீயோனுக்காகவும் எருசலேமுக்காகவும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் பாதுகாப்பு எரிகிற தீப்பந்தத்தைப்போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.

2தேசங்கள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.

3நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

4நீ இனிக் கைவிடப்பட்டவள் எனப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசம் எனப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.

5வாலிபன் கன்னிகையை திருமணம்செய்வதுபோல, உன் மக்கள் உன்னை திருமணம்செய்வார்கள்; மணமகன் மணமகளின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

6எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுவதும் இரவுமுழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத காவற்காரர்களைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்செய்கிறவர்களே, நீங்கள் அமைதியாக இருக்ககூடாது.

7அவர் எருசலேமை உறுதிப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரை அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.

8இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார்.

9அதைச் சேர்த்தவர்களே அதை சாப்பிட்டு கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைத் தயாரித்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.

10வாசல்கள் வழியாக நுழையுங்கள், நுழையுங்கள்; மக்களுக்கு வழியை ஒழுங்குபடுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; மக்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.

11நீங்கள் மகளாகிய சீயோனை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடைசிவரைக்கும் கூறுகிறார்.

12அவர்களைப் பரிசுத்த மக்களென்றும், கர்த்தரால் காப்பாற்றப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.



 <<  Isaiah 62 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Single Panel

Laporan Masalah/Saran